யாழில் உள்ள பிரபல பாடசாலைகளில் 9A பெற்றவர்கள்

வேம்படி மகளிர் கல்லூரி
வெளியாகியுள்ள கல்வி பொது சாதாரண தர பரீட்சையில். வேம்படி மகளிர் கல்லூரியில் 120 மாணவிகள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
வேம்படி மகளிர் கல்லூரியில் 265 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர். அவர்களில் 120 மாணவிகள் 9A பெறுபேறுகளையும், 36 மாணவிகள் 8A பெறுபேறுகளையும் 25 மாணவிகள் 7A பெறுபேறுகளையும் பெற்றதுடன், பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவிகளும் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறித்துள்ளது.
யாழ் . இந்துக்கல்லூரி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 82 மாணவர்கள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 345 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர்.
அவர்களில் 82 மாணவர்கள் 9A பெறுபேறுகளையும், 73 மாணவர்கள் 8A பெறுபேறுகளையும் 33 மாணவர்கள் 7A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
பரீட்சையில் தோற்றிய 345 மாணவர்களில் 342 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறித்துள்ளது.
கொக்குவில் இந்துக் கல்லூரி
கொக்குவில் இந்துக் கல்லூரியில் 23 மாணவர்கள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் 251 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர்.
அவர்களில் 23 மாணவர்கள் 9A பெறுபேறுகளையும், 15 மாணவர்கள் 8A பெறுபேறுகளையும் 20 மாணவர்கள் 7A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
பரீட்சையில் தோற்றிய251 மாணவர்களில் 226 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறித்துள்ளது.
பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் கல்லூரி
மெதடிஸ்த மகளிர் கல்லூரியில், 35 மாணவிகள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர். மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் 160 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர்.
அவர்களில் 35 மாணவிகள் 9A பெறுபேறுகளையும், 16 மாணவிகள் 8A பெறுபேறுகளையும் 15 மாணவிகள் 7A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
பரீட்சையில் தோற்றிய 160 மாணவிகளில் 160 மாணவிகளும் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறித்துள்ளது.




