SuperTopAds

கிளிநொச்சியில் தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் கீழே விழுந்து சாவு!

ஆசிரியர் - Admin
கிளிநொச்சியில் தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் கீழே விழுந்து சாவு!

கிளிநொச்சி - குமாரசாமிபுரம் பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்ற நபர் மரத்திலிருந்து தவறி விழுந்த உயிரிழந்துள்ளார். தவறி விழுந்த நிலையில் உறவினர்களின் உதவியுடன் சிகிச்சைகளுக்காக தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது, ஏற்கனவே இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர், குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள்துரை என்ற துரை ராசா 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

Radio