SuperTopAds

இன்றைய ராசிப்பலன் - 06.07.2025

ஆசிரியர் - Admin
இன்றைய ராசிப்பலன் - 06.07.2025

இன்றைய  பஞ்சாங்கம்

06-07-2025, ஆனி 22, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி இரவு 09.15 வரை பின்பு வளர்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் இரவு 10.42 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் -  06.07.2025

மேஷம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 4.01 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் தொடங்குவதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி மன நிம்மதி ஏற்படும். பெண்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடகம்

இன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பண விஷயத்தில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

சிம்மம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.

கன்னி

இன்று உங்களுக்கு உடல் சோர்வால் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். வண்டி வாகனங்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும்.

துலாம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுப காரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடைய முடியும். சகோதர சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

மகரம்

இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 4,01 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நிலையில் சோர்வும் தேவையற்ற மனகுழப்பமும் ஏற்படும். பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. மதியத்திற்கு பிறகு மனகவலைகள் குறையும்.

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');