SuperTopAds

உடுப்பிட்டி - புறாப்பொறுக்கியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான கனரக வாகனம்

ஆசிரியர் - Admin
உடுப்பிட்டி - புறாப்பொறுக்கியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான கனரக வாகனம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று(5) காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்‌ அறிய வருவதாவது,

பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியிலிருந்து வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட ரோலர் வாகனத்தைத் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனமே புறாப்பொறுக்கி பகுதியில் தடம்புரண்டுள்ளது.

முன்னால் துவிச்சக்கர வண்டியொன்றில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து குறித்த கனரக வாகனத்துடன் விபத்து ஏற்படவிருந்த நிலையில் அதனை தடுக்க முற்பட்ட வேளையே குறித்த வாகனம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.