SuperTopAds

கொள்கலன்கள் விடுவிப்பு- சுங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை!

ஆசிரியர் - Admin
கொள்கலன்கள் விடுவிப்பு- சுங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை!

துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதுடன் தொடர்புடைய சுங்க அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.     

துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமையை அரசியல் மயப்படுத்திய எதிர்க்கட்சிகள் தற்போது பொய்யாகியுள்ளன. முன்னர் அவற்றை மேல் மாகாண ஆளுனருடையவை எனக் கூறியவர்கள் தற்போது அது குறித்து எதுவும் பேசுவதில்லை. 5 மாதங்கள் கடந்த பின்னர் நான் அதற்கு அனுமதி வழங்கியதாக என்மீது குற்றஞ்சுமத்தினர்.

எதிர்க்கட்சிகள் மிகவும் கீழ்தரமான அரசியலிலேயே ஈடுபடுகின்றன. எவ்வாறிருப்பினும் கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவால் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய சுங்க அதிகாரிகளாலேயே இந்த விடயத்தில் தவறிழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதனை மத்திய வங்கி மோசடியைப் போன்ற பாரிய பிரச்சினையாக்குவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. சுங்க திணைக்கள தொழிற்சங்கமொன்று தான் இது தொடர்பில் முதன் முதலில் கருத்துக்களையும் வெளியிட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக போலியான விடயங்களை வெளியிட்டு வந்தன. ஆனால் இன்று அது குறித்து ஒரு வசனம் கூட பேசவில்லை என்றார்.

Radio