SuperTopAds

முதல்நாள் ஆட்டம் நிறைவு - பங்களாதேஷ் அணி 220 ஓட்டங்கள்

ஆசிரியர் - Editor I
முதல்நாள் ஆட்டம் நிறைவு - பங்களாதேஷ் அணி 220 ஓட்டங்கள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகிறது. 

அதன்படி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர நிறைவில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

பங்களாதேஷ் அணி சார்பாக ஷட்மன் இஸ்லாம் 46 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் 35 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்ணான்டோ, விஷ்வ பெர்ணான்டோ மற்றும் தினுஷ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.