SuperTopAds

தமிழ்நாட்டில் குபேரா படம் முதல் நாள் செய்துள்ள வசூல்!

ஆசிரியர் - Admin
தமிழ்நாட்டில் குபேரா படம் முதல் நாள் செய்துள்ள வசூல்!

ராயன் படத்திற்கு பின் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் குபேரா. இப்படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்க நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் முதல் முறையாக பிச்சைக்காரர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர் தனுஷ்.     

இதனால் தனுஷின் நடிப்பிற்கு அமோக வரவேற்பு கிடைத்து, பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தாலும், இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

உலகளவில் முதல் நாள் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ள இப்படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை மட்டுமே இப்படத்திற்கு வசூல் வந்துள்ளது.