SuperTopAds

கிரிக்கெட்டை விட கோலி பெரியவர் இல்லை - அஸ்வின் கருத்து

ஆசிரியர் - Admin
கிரிக்கெட்டை விட கோலி பெரியவர் இல்லை - அஸ்வின் கருத்து

இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் நாளைத் தொடங்கவுள்ளது. 

இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. 

இந்த இளம் அணிக்குக் தலைவராக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்போடு வைத்திருந்த வீரர்களில் ஒருவராகக் கோலி இருந்தார். அவர் இல்லாமல் இந்திய அணி இங்கிலாந்தில் எப்படி விளையாடப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்து வீரர்கள் சிலர் “கோலியை இந்த தொடரில் மிஸ் செய்வோம்” எனக் கூறியுள்ளனர். 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின், கோலி குறித்து தெரிவித்துள்ள கருத்து அவதானம் பெற்றுள்ளது. அதில் “கோலி ஒன்றும் கிரிக்கெட்டை விடப் பெரியவர் இல்லை. அவரை இந்திய அணி மிஸ் செய்யாது. அவர் கிரிக்கெட் விளையாடினார். தற்போது ஓய்வு பெற்றுள்ளார்” என்று மிகவும் சாதாரணமாக அவரை மதிப்பிட்டுள்ளார். அஸ்வினின் இந்த கருத்து தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.