SuperTopAds

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார போட்டி - வீரர்களை வாழ்த்து வழியனுப்பிய யாழ். மாவட்ட செயலர்

ஆசிரியர் - Editor II
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார போட்டி - வீரர்களை வாழ்த்து வழியனுப்பிய யாழ். மாவட்ட செயலர்

மாற்றுத்திறன் நபர்களுக்கான தேசிய கலாசார போட்டி (சித்துரூ) 2025  இன் - மாகாண மட்டப் போட்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

போட்டியில் கலந்து கொள்ளும் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 14 வீர வீராங்கணைகளை மாவட்ட செயலர் ம. பிரதீபன் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

இதன் போது மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் தி. உமாசங்கர், பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர்களான ஆர். தர்மினி, பா. சிவதர்சினி மற்றும் எஸ்.சுமதி ஆகியோர் உடனிருந்தார்கள்.