SuperTopAds

வடக்கில் உள்ள அரச உத்தியோகஸ்தர்களுக்கு Ai பயிற்சிகளை வழங்க ஏற்பாடு

ஆசிரியர் - Editor II
வடக்கில் உள்ள அரச உத்தியோகஸ்தர்களுக்கு Ai பயிற்சிகளை வழங்க ஏற்பாடு

வடக்கில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள கூடியவாறான பயிற்சிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார் 

வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் ஏற்பாட்டில் இரண்டு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.