யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் வடக்கு ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்த முதல்வர்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
அதன் போது, யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார்.
யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார்.