SuperTopAds

சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசிய பேரவை வசம்

ஆசிரியர் - Editor II
சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசிய பேரவை வசம்

சாவகச்சேரி நகரசபை தவிசாளராக போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் திருவுளச்சீட்டு முறையின் மூலம் தவிசாளராக தெரிவாகியுள்ளார்.

சாவகச்சேரி நகர சபை தவிசாளர் தெரிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

அதன் போது தமிழரசு மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர்கள் தலா 7வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர்   வ.சிறிபிரகாஸ் தெரிவானார்

அதே போன்று உப தவிசாளர் தெரிவின் போதும், தமிழரசு மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளர்கள் 07 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஞா. கிஷோர் தெரிவானார்.

அதேவேளை சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்காதவர் என வழக்குதாக்கல் செய்யப்பட்ட தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சபை அமர்வில் கலந்துகொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.