SuperTopAds

மன்னார் காற்றாலை மின் உற்பத்திக்கு எதிராக போராட்டம்

ஆசிரியர் - Editor II
மன்னார் காற்றாலை மின் உற்பத்திக்கு எதிராக போராட்டம்

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். 

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து குறித்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.

பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.