யாழ்ப்பாண இயக்குனர் படைப்பில் இணைந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.

தென்னிந்திய சினிமாவின் அனுபவமிக்க குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கர், யாழ்ப்பாண இயக்குனர் அருளானந்தம் ஜீவதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கர்மா' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளது,
திரையுலக வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
எம்.எஸ். பாஸ்கரின் தனித்துவமான நடிப்புத் திறனும், யாழ்ப்பாண மண்ணின் கலைத்திறனும் இணையும் இந்த அரிய சங்கமம், 'கர்மா' திரைப்படத்தை ஒரு புதிய பரிணாமத்திற்கு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.