SuperTopAds

Tejas Mk-2 போர் விமானத்திற்காக பிரான்சுடன் இணைய இந்தியா திட்டம்!

ஆசிரியர் - Admin
Tejas Mk-2 போர் விமானத்திற்காக பிரான்சுடன் இணைய இந்தியா திட்டம்!

அமெரிக்காவின் ஜெட் எஞ்சின் வழங்கலில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, இந்தியா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்தியா தனது அடுத்த தலைமுறை போர் விமானங்களான Tejas Mk-2 மற்றும் AMCA (அட்வான்ஸ்ட் மீடியம் காம்பட் ஏர்கிராப்ட்) ஆகியவற்றுக்கு பிரான்ஸ் நிறுவனம் Safran-உடன் புதிய ஒத்துழைப்பு திட்டத்தை பரிசீலித்துவருகிறது.     

சாஃப்ரான் நிறுவனம், இந்தியாவின் Gas Turbine Research Establishment (GTRE) மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) ஆகிய நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு முன்மொழிவுகளை அனுப்பியுள்ளது.

இந்த எஞ்சின்கள் Tejas Mk-2 மற்றும் AMCA இரண்டும் உள்ளூர் தொழில்நுட்பத்துடன் செயல்படக் கூடியவையாக உருவாக்கப்படும்.

தற்போது, Tejas Mk-2 திட்டம் அமெரிக்காவின் GE F414 (98 kN thrust) என்ஜினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் வழங்கல் தாமதம் மற்றும் அதிகமான செலவுகளால் இந்தியா விரைவில் மாற்றுத் திட்டங்களை நாடுகிறது.

இதையடுத்து, சாஃப்ரான் நிறுவனம் 110 kN த்ரஸ்ட் உடைய புதிய எஞ்சினை Tejas Mk-2க்கு வழங்க முன்வந்துள்ளது. இது விமானத்தின் வேகம், எடை தூக்கும் திறன், மற்றும் பயண தூரத்தை பெரிதும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், AMCA திட்டத்துக்காக 120 kN த்ரஸ்ட் உடைய உயர் சக்தி மிக்க எஞ்சினும் சாஃப்ரானால் முன்மொழியப்பட்டுள்ளது. இது இரட்டை என்ஜின் அமைப்பு கொண்ட ஸ்டெல்த் போர் விமானத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

2029-ஆம் ஆண்டுக்குள் ஐந்து AMCA மாதிரிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

சாஃப்ரான் தற்போது ஹெலிகாப்டர் என்ஜின் திட்டங்களில் HAL உடன் இணைந்து செயல்படுகிறது. புதிய ஒப்பந்தம் ஊக்குவிக்கப்பட்டால், இந்தியாவின் உள்நாட்டு விமான எஞ்சின் உற்பத்தி துறையில் முக்கிய முன்னேற்றமாக அமையும். மேலும், Transfer of Technology (ToT) உடன்படிக்கைகள் மூலமாக இந்திய பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் புதிய பரிமாணம் உருவாகும்.