கோண்டாவிலில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

ஆசிரியர் - Admin
கோண்டாவிலில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் படுகாயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இன்று காலை நடந்தது என்ற பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர், வீதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த தனியார் பேருந்துடன் பின்னால் சென்று மோதியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.