மார்பக புற்றுநோயாளர்களுக்கு தேவையான சுமார் 20 வகையான மருந்துகள் இல்லை! அந்தரிக்கும் நோயாளர்கள்..
மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் (Trastuzumab) தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால்,
தொடர் சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கண்டி தேசிய வைத்தியசாலைகள்,
கராப்பிட்டி மற்றும் யாழ்.பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம வைத்தியசாலைகள் உட்பட பல வைத்தியசாலைகளில் trastuzumab தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1000 மார்பக புற்றுநோய் தடுப்பூசிகளை பெறுவதற்கு கொள்வனவு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் சுமார் 500 தடுப்பூசிகள் பெறப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
புற்று நோயாளர்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்க வேண்டியுள்ள போதிலும், இந்த மருந்துகள் இல்லாததால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம வைத்தியசாலையில் வருடாந்தம் சுமார் 3,000 புற்று நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும், நாளாந்தம் சுமார் 1,000 நோயாளர்கள் உள்நோயாளிகளாகவும் வெளிநோயாளிகளாகவும்
சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.