யாழ் நகரில் உருவாகிவரும் கூவம் ஆறு - மாநகர மேயர் அவர்களே உங்களின் கவனத்திற்கு..

ஆசிரியர் - Editor
யாழ் நகரில் உருவாகிவரும் கூவம் ஆறு - மாநகர மேயர் அவர்களே உங்களின் கவனத்திற்கு..

யாழ் நகரில் கே.கே.எஸ் வீதி மற்றும் பேருந்து நிலையத்திற்கு முன்னால் செல்லும் பேமன்ட் (payment road) வீதியை இனைக்கும் வீதியான கந்தப்பு சேகரம் வீதியானது மிகவும் துர்நாற்றத்துடனும் வீதிகளில் குப்பைகளுடனும் காணப்படுகிறது அத்துடன் இவ்வீதியின் குறுக்கே உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாயில் பிளாஸ்டிக் போத்தல்களும் ரின்களும் குவிந்து காணப்படுகிறது

எனவே குறித்த கழிவு நீர் செல்லும் கால்வாய் அடைத்து நீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருவதினால் பொதுமக்கள் குறித்த வீதியுனூடாக பயணிக்க தயங்கி வருகிறார்கள் மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரினால் டெங்கு மற்றும் பல நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது

எனவே யாழ் மாநகர மேயர் ஆர்னோல்ட் அவர்களே உங்களின் காலகட்டத்தில் தான் யாழில் கூவ ஆறு ஆரம்பிக்கப்பட்டது என்ற பெயரை நிலை நாட்டாது விரைந்து செயற்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.