SuperTopAds

ஒரு றாத்தல் பாணின் விலை 300 ரூபாய்! அடுத்த ஒருசில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என தேசிய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
ஒரு றாத்தல் பாணின் விலை 300 ரூபாய்! அடுத்த ஒருசில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என தேசிய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை..

ஒரு றாத்தல் பாண் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தொிவித்திருக்கின்றது. 

கோதுமை மாவின் விலை குறைக்கப்படாவிட்டால் பாணின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அச்சங்கம் முன்னர் எச்சரித்திருந்தது.

நாடளாவிய ரீதியில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ள நிலையில் பாணும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.