ஒரு அரச அதிகாரி ஒய்யாரமாக சாப்பிடுவதற்கு 42 ஆயிரம் ரூபாய் செலவில் வெள்ளி கலந்த கரண்டிகள் இலங்கையில் நடந்த சம்பவம்..
சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் 6 கரண்டிகளை 42 ஆயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்த அரச ஊழியர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
புவியியல் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கே இவ்வாறு கரண்டி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரி சாப்பிடும் போது பயன்படுத்தும் கரண்டிகள் பழையதாக இருப்பதால் புதிய கரண்டிகளை வாங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பத்தரமுல்லையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இருந்து 5000 ரூபாவுக்கு ஆறு கரண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டு
அவற்றை பரிசோதித்த சம்பந்தப்பட்ட அதிகாரி அவர்கள் எதிர்பார்த்த தரத்தில இல்லாத காரணத்தினால் தரமான கரண்டிகளை கொண்டு வருமாறு பணித்துள்ளார்.
பின்னர் வெள்ளி கலந்ததாக கூறப்படும் ஆறு கரண்டிகளை 42000 ரூபா செலுத்தி வாங்கியதாக கூறப்படுகிறது.