நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி..!

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி..!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் விலை எதிர்வரும் 8ம் திகதி நள்ளிரவுடன் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். 

இதன்படி, 12.5 கிலோகிராம் கொள்கலன் ஒன்று சுமார் 200 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவுடன் குறைக்கப்படும் என முன்னதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்திருந்தார்.

எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு