கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்! ஒருவர் பலி, 600 பேர்வரை தப்பி ஓடியதாக தகவல், இராணுவம் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்! ஒருவர் பலி, 600 பேர்வரை தப்பி ஓடியதாக தகவல், இராணுவம் குவிப்பு..

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 600 பேர் தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு தகவல் வழங்கும்போது, புனர்வாழ்வு நிலையத்திலிருத்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு செல்வது கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

எனினும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் துங்காவில பாலத்திற்கு அருகில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் ராணுவம் மற்றும் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு