யாழ் முழுவதும் திடீர் மின்தடை; பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பு

ஆசிரியர் - Admin
யாழ் முழுவதும் திடீர் மின்தடை; பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பு

யாழ்.குடாநாடு முழுவதும் இன்று புதன்கிழமை(16)பிற்பகல் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

முன்னறிவித்தல் எதுவுமின்றி ஏற்படுத்தப்பட்ட இந்த மின்சாரத் தடை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்தது.

திடீர் மின்சாரத் தடை காரணமாக பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, திடீர் மின்சாரத் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் முறைப்பாட்டு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது யாழ். குடாநாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக ஆராய்ந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.