முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகளில் மாற்றம்! - மாணவர்களின் வழிக்கு வந்தது வடமாகாணசபை

ஆசிரியர் - Admin
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகளில் மாற்றம்! - மாணவர்களின் வழிக்கு வந்தது வடமாகாணசபை

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வு தொடர்பான ஒழுங்கமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில், யாழ். பல்கலைக்கழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் கோரிக்­கை­க­ளுக்கு, வடக்கு மாகாண சபை இணங்கியுள்ளதையடுத்தே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கும், வடக்கு மாகா­ண­ச­பை­யின் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக் குழு­வுக்­கும் இடை­யில் கடந்த ஞாயிற்­றுக் கிழமை முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற ஏற்­பா­டா­கி­யி­ருந்­த­போ­தும் அது நடை­பெ­ற­வில்லை. 

இந்த நிலை­யில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் பிர­தி­நி­தி­கள், சிவில் சமூ­கப் பிர­தி­கள் உள்­ள­டங்­க­லான குழு­வி­னர் நேற்­று­முன்­தி­னம் மாலை சந்­தித்­த­னர்.

இந்­தச் சந்­திப்­பில் மாண­வர்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்கு, முத­ல­மைச்­சர் இணக்­கம் தெரி­வித்­தார். யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தயா­ரித்­தி­ருந்த நிகழ்ச்சி நிர­லின் ஒழுங்­குக்கு அமை­வாக, நிகழ்­வு­களை முன்­னெ­டுக்க முத­ல­மைச்­சர் சந்­திப்­பில் இணங்­கி­யி­ருந்­தார். 

இன்று புதன் கிழ­மையே, முள்­ளி­வாய்க்­கால் ஏற்­பாட்­டுக்­குழு முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் சந்­திப்பு நடத்­தும் என்­றி­ருந்த நிலை­யில், மாண­வர்­க­ளு­டன் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­ட­தும் நேற்­றுக் கூட்­டத்­துக்கு முத­ல­மைச்­சர் அழைப்பு விடுத்­தார்.

நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக்­கு­ழு­வில் 9 பேர் உள்ள நிலை­யில் 4 பேர் மாத்­தி­ரமே நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான து.ரவி­க­ரன், த.குரு­கு­ல­ராஜா ஆகி­யோரே நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர்.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் சார்­பில் 3 பேரும், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் போரா­ளி­யான பசீர் காக்­கா­வும் கலந்து கொண்­ட­னர். மாண­வர்­க­ளு­டன் கடந்த சனிக்­கி­ழமை பங்­கேற்ற பொது­அ­மைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் எவ­ரும் நேற்­றுச் சந்­திப்­பில் பங்­கேற்­க­வில்லை.

முத­ல­மைச்­சர் முன்­னரே எழு­தி­வந்த, நிகழ்வு ஒழுங்கை வாசித்­தார். அனை­வ­ரும் ஏற்­றுக் கொண்­ட­னர்.

இதே­வேளை சுட­ரேற்­றல் காலை 10 மணிக்கு இடம்­பெ­ற­ வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை தீர்­மா­னித்­தி­ருந்­தது. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் மதி­யம் 12.30 மணிக்கே இடம்­பெ­ற­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­னர். இந்த நிலை­யில் தற்­போது 11 மணிக்கு சுட­ரேற்­றல் மாற்­றப்­பட்­டுள்­ளது.

வடக்கு – கிழக்­கின் எட்டு மாவட்­டங்­க­ளை­யும், ஏனைய மாவட்­டங்­கள் எல்­லா­வற்­றை­யும் சேர்த்து ஒன்­றா­க­வும், மொத்­த­மாக 9 சுடர்­கள் ஏற்­று­வது என்­றும், அவை அந்­தந்த மாவட்­டங்­க­ளைப் பிர­தி­நித்­து­வப்­ப­டும் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் ஏற்­று­வார் என்­றும் வடக்கு மாகா­ண­ச­பை­யின் நினை­வேந்­தல் குழு முடி­வெ­டுத்­தி­ருந்­தது.

இதற்­குப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் ஆட்­சே­பம் தெரி­வித்­துள்­ள­னர். சரி­யான ஒரு­வரை எல்லா மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் தெரி­வது கடி­னம் என்­றும் ஒரே­யொரு முதன்­மைச் சுடரை ஏற்­று­வ­து­ தான் சரி­யா­னது என்­றும் கூறி­யுள்­ள­னர். இதனை வடக்கு மாகாண சபை நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக்­குழு ஏற்­றுக் கொண்­டுள்­ளது.

போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களே சுட­ரேற்­று­வர் என்று முன்­னர் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும், தற்­போது முத­ல­மைச்­சர் சுடரை ஏற்றி, பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரி­டம் கைய­ளிக்க அவர் ஏற்­று­வார் என்று மாற்­றப்­பட்­டுள்­ளது.

அதேவேளை, இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமேனன், நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை, கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த தரப்புக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை அனைத்து தரப்புக்களையும் இணைத்து அதாவது கடந்த காலங்களில் முரண்பட்டு இருந்த நான்கு தரப்புக்களையும் ஒன்றாக இணைத்து ஏற்பாடுகளை செய்வதுக்காக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்துள்ளோம்.

எதிர்வரும் 18 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரிய மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் மண்ணை அது வந்தடையும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உலகுக்கு காத்திரமான செய்தி ஒன்றினை சொல்ல தயாராகிக்கொண்டிருக்கின்றோம். அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தாயகத்தில் எவ்வாறு நாங்கள் ஒற்றுமையான நினைவு நிகழ்வை நடத்துகின்றோமோ, அதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் அனைவரும் இலங்கை தூதரகத்துக்கு முன்பாகவோ அல்லது நாட்டின் தூதரகத்துக்கு முன்பாக சென்று நினைவேந்தலை செய்வதன் ஊடாக, அந்த நாட்டின் அரசாங்கம் ஊடாக காத்திரமான செய்தி ஒன்றினை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல முடியும். எங்கள் உரிமையைப் பெற்றுக்கொள்ள அது வலுசேர்க்கும்” என தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு