எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் - இராணுவம் மோதல்..! இராணுவ அதிகாரி கைது..

ஆசிரியர் - Editor I
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் - இராணுவம் மோதல்..! இராணுவ அதிகாரி கைது..

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் - இராணுவத்தினர் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பான சி.சி.ரீ.வி கமரா பதிவுகள் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றது. குறித்த சம்பவம் வரகாபொல - தும்மலதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இராணுவ அதிகாரி ஒருவருக்கும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இராணுவ அதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இராணுவ அதிகாரியினால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று வரகாபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு