தாக்குதலுக்கு இலக்கான கணவனை பார்க்க வைத்தியசாலைக்கு சென்ற மனையின் கை வெட்டி எறியப்பட்டது, மகள் மீது கத்திக்குத்து..!

ஆசிரியர் - Editor I
தாக்குதலுக்கு இலக்கான கணவனை பார்க்க வைத்தியசாலைக்கு சென்ற மனையின் கை வெட்டி எறியப்பட்டது, மகள் மீது கத்திக்குத்து..!

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த கணவனை பார்க்க வைத்தியசாலைக்கு சென்ற மனைவி மற்றும் மகள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் திஸ்ஸமஹாராம - அக்குருகொடதில்லிய பகுதியில் நேற்றய தினம் மாலை 5 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. 

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

தாயும் மகளும் முச்சக்கரவண்டியில் பயணித்தபோது சபாரி ஜீப்பில் வந்த இருவர் முச்சக்கரவண்டியை நிறுத்தி தாயையும் மகளையும் கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 54 வயதான தாயும் 34 வயதான மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாயின் வலது கை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சந்தேகநபர்கள் கடந்த 20ஆம் திகதி குறித்த 54 வயதான பெண்ணின் கணவரை வீட்டிற்கு வந்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு