வவுனியா சிறைச்சாலைக்கு சென்று கைதிகளின் நிலைமையை கேட்டறிந்த சிவசக்தி ஆனந்தன்

ஆசிரியர் - Admin
வவுனியா சிறைச்சாலைக்கு சென்று கைதிகளின் நிலைமையை கேட்டறிந்த சிவசக்தி ஆனந்தன்

வவுனியா சிறைச்சாலைக்கு இன்று காலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வியஜம் செய்து அங்குள்ள கைதிகளின் நிலைமைகள் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

அவர் சிறைச்சாலைக்குச் சென்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது,

கடந்த சில திங்களாக சிறைக்கைதிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சிறையிலுள்ள நடைமுறைப்பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து இங்குள்ள கைதிகளை அனுராதபுரத்திற்கு மாற்றப்படுவதாகவும் அதனைக்கண்டித்து இங்குள்ள கைதிகள் நேற்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

ஆகவே சிறைச்சாலையிலுள்ள பிரச்சினைகளை நேரடியாக கண்டறிவதற்கு வடமாகாணசபை உறுப்பினர் ம. தியாகராசாவுடன் வருகை தந்து இங்குள்ள பொலிசார் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட அடிப்படையில் இங்குள்ள சிறைச்சாலையில் 55 கைதிகளுக்குரிய அடிப்படை வசதிகளே காணப்படுகின்றது.

ஆனால் 285 கைதிகள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது அத்துடன் தண்ணீர் வசதிகள் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆகவே இங்குள்ள 100பேரையாவது அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றவேணடிய தேவை ஏற்பட்டுள்ளதாக இங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

வவுனியா சிறைச்சாலை நீண்டகாலமாக வவுனியா நகரத்திற்கு மத்தியில் பொருத்தமற்ற இடத்தில் இட நெருக்கடிப்பிரச்சினை காணப்படுகின்றது கடந்த காலத்தில் நாங்கள் தொடர்புபட்ட அமைச்சுக்களுடன் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றோம்.

மன்னார் வீதியில் செக்கட்டிப்பிலவு பிரதேசத்தில் சிறைச்சாலைக்காக ஏழு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்காணியில் சிறைச்சாலை அமைப்பதற்கு பிரதேச செயலாளரூடாக மாகாண காணி ஆணையாளரூடாக அக்காணி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையின் ஆரம்பப்பணியை மேற்கொள்வதற்கு தடை ஒன்றும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆகவே முக்கிய பிரச்சினையாக இட நெருக்கடி நிலையே காணப்படுகின்றது பலதரப்பட்ட குற்றசாட்டுக்களுடன் தொடர்புபட்ட கைதிகள் இங்கு இருக்கின்றார்கள். சிறு குற்றங்களுக்கும் பிணை தருவதற்கு மறுக்கின்ற காணரத்தினால் தங்களுடைய மனைவி பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் கல்வி நிலை உட்பட மிகுந்த நெருக்கடியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டால் தங்களை தமது உறவினர்கள் சென்று பார்வையிடுவதில் பல பிரச்சினைகள் எற்பட்டுள்ளதாகவும் பொருளாதார ரீதியலான நெருக்கடி மொழிப்பிரச்சினை போக்குவரத்துப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கைதிகள் தற்போதுள்ள சிறைச்சாலையில் தாங்கள் இருக்கக்கூடிய நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இதையடுத்து தற்போது அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்படும் விடயம் இங்குள்ள சிறை அதிகாரிகளினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்கள் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு