ரணில் விக்ரமசிங்க ஆலோசனை சொல்லும் அளவிற்கு நாட்டின் பொருளாதார நிலைமை மாறிவிட்டது
உணவுப்பஞ்சத்தில் இருந்து எமது நாட்டை அவசரமாக எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
.ரணில் விக்ரமசிங்க ஆலோசனை சொல்லும் அளவிற்கு நாட்டின் பொருளாதார நிலைமை மாறிவிட்டது.ஏனெனில் ரணிலின் ஆட்சியில் தானே எமக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டன.அவருக்கு நெல்லு மரத்தை(அரிசி) தெரியாது.எனவே இனவாதத்தை வைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.உணவுப்பஞ்சத்தில் இருந்து எமது நாட்டை அவசரமாக எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார்