SuperTopAds

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் -.இராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பு

ஆசிரியர் - Editor III
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் -.இராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பு

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் -.இராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பு

லங்கா ஐ. ஓ சி தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை  மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஏலவே பாதுகாப்பு கடமைக்காக ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் சனிக்கிழமை(26) அன்று இரவு எரிபொருள் நிரப்ப வருகை தந்தவர்களை ஒழுங்கமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.மேலும் கடந்த வெள்ளிக்கிழமை  (25) நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து வகை பெற்றோல்களின் விலையை 49 ரூபாவினால் அதிகரிக்க லங்கா ஐஓசி தீர்மானித்திருந்தது.எனினும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி  அந்நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.லங்கா ஐ. ஓ சி இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை விலையை உயர்த்தியுள்ளது.டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதே எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

இதன் படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 254 ரூபாவில் இருந்து 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.283 ரூபாவாக இருந்த 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 332 ரூபாவாகும்.யூரோ 03 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 263 ரூபாவில் இருந்து 312 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.நிறுவனம் விற்பனை செய்யும் ஒட்டோ டீசல் மற்றும் சூப்பர் டீசல் விலைகள் திருத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கிடையில் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.அதே வேளை அம்பாறை மாவட்டத்தில் கல்முனை,மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, பெரியநீலாவணை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, உள்ள  ஒரு சில பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்  எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் சில  லங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவும்   எரிபொருளுக்காக பொது மக்கள்  வரிசைகளில் காணப்பட்டனர்.எவ்வாறாயினும் கடந்த நாட்களை விட தற்போது எரிபொருளுக்கான இந்த வரிசைகள் வெகுவாகக் குறைவடைந்திருந்தன.

எனினும் அனைத்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ( சிப்பெட்கோ )எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவத்தினர் எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை(22) முதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்களை கண்கானிப்பதற்காகவே இவ்வாறு இராணுவத்தினர்  கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செயற்கை தட்டுப்பாட்டை குறைப்பதற்காகசும்  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில் இராணுவத்தினரை ஈடுபடுத்தப்பட்டுள்ளதை காணமுடிந்தது.