தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயத்தை இடமாற்ற மீண்டும் முஸ்தீபு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயத்தை இடமாற்ற மீண்டும் முஸ்தீபு-ஏன் அதாவுல்லாஹ் M.P மௌனம்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயத்தை சாய்ந்தமருது பகுதியில் இருந்து அம்பாறை இடமாற்ற மீண்டும் முஸ்தீபு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் மௌனமாக இருப்பது மக்கள் மத்தியில் வீணான சந்தேகங்கள் எழுப்பியுள்ளதாக சமூக சேவகர் யூ.எல் நூருல் ஹூதா கேள்வி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(22) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது
பல காலங்களாக சாய்ந்தமருது பகுதியில் அமைந்திருந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயம் அம்பாறைக்கு திடீர் இடமாற்றப்படுவது மிக வேதனையான விடயமாகும்.இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் மௌனமாக இருப்பது வீண் சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்துகின்றது.கடந்த காலங்களில் சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டதை போன்று இதிலும் அவர் அக்கறை செலுத்தவில்லை.இதனால் சாய்ந்தமருது மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.சாய்ந்தமருது மக்களுக்கு நகர சபை ஒன்றை பெற்று தருவதாக கூறி ஏமாற்றி கொண்டிருக்கும் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் அவர்கள் இவ்விடயத்தில் தலையீடு செய்து குறித்த மாகாண காரியாலயத்தை தடுத்து நிறுத்தாவிடின் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.