பிரிட்டனில் வாழும் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த பிரிட்டன் அமைச்சரிடம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
பிரிட்டனில் வாழும் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த பிரிட்டன் அமைச்சரிடம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கோரிக்கை..

பிரிட்டனில் வாழும் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கும்படி பிரிட்டனின் தெற்காசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் தாரிக் அகமட்டிடம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். 

பிரித்தானிய அமைச்சரை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தவேளை ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். 

அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் தாரிக் அஹமட் அவர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு