சுசிலை நீக்கியவர்கள் லன்சாவை ஏன் நீக்கவில்லை?

ஆசிரியர் - Editor IV
சுசிலை நீக்கியவர்கள் லன்சாவை ஏன் நீக்கவில்லை?

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

அரசாங்கத்தை விமர்சித்து பேசிய 24 மணித்தியாலங்களின் பின்னர் அவரது அமைச்சுப்பதவி ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளது. விமர்சனம் செய்ததற்காக சுசில் பிரேமஜயந்தவை நீக்கியவர்கள், அரசை தொடர்ந்து அதிகமாக விமர்சித்துவரும் நிமல் லன்சாவிற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

தவறுகளை திருத்திக் கொண்டு, மக்களின் பிரச்சினையைத் தீர்த்தால் அரசாங்கத்தினால் முன்னோக்கிச் செல்ல முடியும் என்றும் மைத்திரி அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதும் வீடுகளில் எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அவர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு