மாவீரர் நாளை நினைவேந்துவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!

ஆசிரியர் - Admin
மாவீரர் நாளை நினைவேந்துவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!

எது எப்படி இருந்தாலும் மாவீரர் நாளை நினைவேந்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

 மேலும், ஓவ்வொருவரும் தங்களின் இறந்த மாவீரர்களை நினைவுகூர வேண்டும்.  அதனால், இந்த தடையுத்தரவுகளை உடைத்தெறிய வேண்டும்.

 நூற்றுக்கணக்கிலோ, ஆயிரக்கணக்கிலோ நாங்கள் திரள்கின்றபோது, ​​அவர்கள் காரணம் காட்டினால் இடைவெளிகளைப் பேணி நாங்கள் இதை செய்ய முடியும்.

 ஆகவே, இதை வைத்துக்கொண்டு தடையுத்தரவு பெற முயற்சிப்பது இலங்கை அரசாங்கத்தினுடைய அடக்குமுறையாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்.  இந்த அடக்குமுறைகள் உடைத்தெறியப்படவேண்டும்.  அதற்கு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சிகள், பொதுமக்கள், செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Radio