சுகாதார தொண்டர்கள் பிரச்சினையை தீர்த்து தருகிறேன், தீர்க்காவிட்டால் எனது அலுவலகத்திற்குள் உட்கார்ந்து போராடுங்கள், ஆளுநர் தொிவிப்பு..

ஆசிரியர் - Editor I
சுகாதார தொண்டர்கள் பிரச்சினையை தீர்த்து தருகிறேன், தீர்க்காவிட்டால் எனது அலுவலகத்திற்குள் உட்கார்ந்து போராடுங்கள், ஆளுநர் தொிவிப்பு..

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆளுநர் செயலக வாசலில் பல நாட்கள் போராட்டம் நடாத்திவரும் சுகாதார தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருக்கின்றார். 

இந்த சந்திப்பின்போது சுகாதார தொண்டர்களின் நியமனத்தை சாதகமாக பரிசீலிப்பதாகத் தெரிவித்த கருத்து தமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்ததாக நியமனத்திற்காக காத்திருக்கும் சுகாதார தொண்டர்கள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகத்தின் வாயியில் தமது நியமனத்திற்காக தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவரும் சுகாதார தொண்டர்களை சந்தித்தபோதே 

ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக சுகாதார தொண்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாம் தொடர்ச்சியாக எட்டு மாதங்களுக்கு மேலாக நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறோம். 

முன்பு பதவி வகித்த வடக்கு ஆளுநர் தமது அதிகாரத்துக்கு உட்பட்டு சுகாதார தொண்டர்களின் நியமனத்தை செய்ய முடியாது என கைவிரித்த நிலையில் நாம் தொடர்ச்சியாக போராடிக்கிறோம்.

வடமாகாணத்தின் தற்போதைய புதிய ஆளுநராக பதவியேற்ற ஜீவன் தியாகராஜா நாம் தகரக் கொட்டகைக்குள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது எம்மை சந்தித்தார். 

எம்மைச் சந்தித்த போது உங்கள் பிரச்சினை தொடர்பில் யாழ்.வந்தபோது தான் அறிந்தேன் எனக் தெரிவித்தார். நமது நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவரிடம் கையளித்தபோது 

நீங்கள் போராட்டம் செய்யாதீர்கள் நான் உங்களுடைய பிரச்சினையை தீர்ப்பேன் என தெரிவித்தார். நாங்கள் அவரிடம் பணிவாக கேட்டுக் கொண்டோம் நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்தபோது நமது நியமனம் கிடைக்கும் வரை 

குறித்த இடத்தில் தான் தங்கியிருந்து போராடுவோம் என தெரிவித்தோம். அதற்கு அவர் சொன்ன வார்த்தைகள் எமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தது. அதாவது நான் உங்களுக்கு நியமனத்தை பெற்று தராவிட்டால் 

நீங்கள் எனது அலுவலகத்திற்குள் வந்து போராட்டத்தை நடாத்த முடியும் என தெரிவித்தார்.ஆகவே எமது நியமனம் தொடர்பில் புதிய ஆளுநரின் வார்த்தைகள் தமக்கு புது நம்பிக்கையை தருவதாக அமைகிறது 

என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு