வடக்கில் கட்டாக்காலி நாய்கள், மாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டம்! மக்கள் சந்தித்துவந்த நீண்டகால தொல்லைக்கு முடிவுகட்ட ஆளுநர் தீர்மானம்..
வடக்கில் கட்டாக்காலி நாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
கட்டாக்காலி நாய்கள் மற்றும் மாடுகளின் நடமாட்டம் வீதிகளில் அதிகரித்துள்ளது. இதனால் தினசரி விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் பொதுமக்கள்
பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். நேற்றய தினம் தென்மராட்சியில் ரயிலுடன் மோதி 10ற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.
இது குறித்த தகவல் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆளுநர் மேற்படி விசேட திட்டம் தொடர்பான தகவலை வழங்கியுள்ளார்.
இதன்படி கட்டாக்காலி நாய்கள், மாடுகளுக்கு உணவு வழங்கல், பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் நடமாடாமல் பராமரித்தல் உள்ளிட்வற்றை அடக்கியதாக
விசேட திட்டம் ஒன்றை ஆளுநர் செயலகம் ஊடாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கின்றார்.