யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பவதிகளுக்கு தடுப்பூசி அட்டை கட்டாயமா? பணிப்பாளர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பவதிகளுக்கு தடுப்பூசி அட்டை கட்டாயமா? பணிப்பாளர் விளக்கம்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி பெறாத கர்ப்பவதி பெண்களுக்கும் சாதாரண நிலைமையில் வழங்கப்பட்டதைபோன்று சிகிச்சை வழங்கப்படுவதாக பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மற்றும் பிரசவத்திற்காக கர்ப்பவதிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதில் தடுப்பூசி பெற்றவர்கள் பெறாதவர்கள் என்ற பேதம் எதுவும் காட்டப்படவில்லை. 

சாதாரண நிலைமையில் வழங்கப்பட்டதைபோன்று சிகிச்சை வழங்கப்படுகின்றது. தடுப்பூசி பெறாதவர்கள் எதேனும் காரணங்களுக்காக தடுப்பூசி பெறாது விட்டிருக்கலாம் எனவும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு