தப்பி ஓடியுள்ள சந்தேகநபர்களை 3 நாட்களுக்குள் பிடிப்போம்..! மனித உரிமை ஆணைக்குழுவுக்கு பொலிஸார் விளக்கம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.ஏழாலையில் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த வாள்வெட்டு குழு ரவுடியை பொலிஸார் தப்பிக்கவிட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணையில் தப்பியோடிய சந்தேகநபரை 3 நாட்களுக்குள் கைது செய்வதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சுன்னாகம் பொலிஸார் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். 

பொதுமக்கள் வழங்கியுள்ள முறைப்பாட்டில் தாக்குதலில் ஈடுபட்ட இருவரை பிரதேச மக்கள் சுன்னாகப் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் ஒருவர் அன்றய தினமே பெலிஸார் முன்னிலையில் தப்பித்திருந்தார்.

காயமடைந்த மற்றைய சந்தேக நபர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் தப்பினார். இந்நிலையில் நிலையில் சந்தேகநபர்களை தப்பிக்க விட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் 

கடந்த 06 ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சுன்னாகம் பொலிஸாரையும், பாதிக்கபட்ட தரப்பினரையும் 

மனித உரிமை ஆணைக்குழு விசாரணைக்காக அழைத்தது. சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக இரு தரப்பினர் மீதும் விசாரனை இடம்பெற்ற நிலையில் விசாரனை முடிவுற்றதும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்டவர்கள் 

தப்பி ஓடியுள்ள சந்தேக நபர்களால் எமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆணைக்குழவுக்கு தெரிவித்தியுள்ளேம். சுன்னாகம் பொலிஸார் மூன்று நாட்களுக்குள் சந்தேக நபரை கைது செய்வதாக கூறியுள்ளதாகவும்,

மேலும் தமது உயிருக்கு ஆபத்து ஏற்ப்பட்டால் சுன்னாகம் பொலிஸாரே காரணம்என மனித உரிமை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தினோம். இதற்கு பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவதாக ஆணைக்குழு முன் தெரிவித்த நிலையில் 

மூன்று நாட்களுக்குள் சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு