லண்டனுக்குப் புறப்பட்டார் ஜனாதிபதி!

ஆசிரியர் - Admin
லண்டனுக்குப் புறப்பட்டார் ஜனாதிபதி!

லண்டனில் நாளை ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானியா நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார். 

பொதுநலவாய மாநாடு நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்ற உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி வரும் 22 ஆம் திகதியே நாடு திரும்பவுள்ளார்.