எம்.பி ஆகின்றார் கோடீஸ்வரன் -தேசியப்பட்டியல் கைமாறுகிறது
இலங்கை தமிழரசுக் கட்சியில் தற்போதைய இழுபறி நிலையினால் அம்பாறை மாவட்ட தேசியப்பட்டியல் விவகாரம் சூடு பிடித்துள்ளது.
சூடு பிடித்துள்ள ஜெனீவா விவகாரத்தினால் கடிதங்கள் பல வெளிவந்திருந்தன.இதனை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் பிளவுகள் ஏற்பட்டு தமிரசுக்கட்சியில் உட்பூசல் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு படுதோல்வியினை சந்தித்திருந்தது.அவ்வாறு இருந்த போதிலும் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் தவராஜா கலையரசன் என்பவர் பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை நிராகரித்து பாராளுமன்ற உறுப்பினர்களான ஆபிரகாம் சுமந்திரன் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் எடுத்த செயற்பாட்டினால் எம்.பி ஆனார்.
தற்போது இவ்விரு எம்பின்களதும் உறவில் ஏற்பட்ட விரிசலை அடுத்து தற்போது தவராசா கலையரசனது தேசியப்பட்டியல் இழுபறி நிலையை அடைந்துள்ளது.இதனை அடுத்து அடுத்த தேசிய பட்டியல் எம்.பியாக க.கோடீஸ்வரனை நியமிக்குமாறு ஒரு தரப்பு தற்போது தமிழரசுக்கட்சியை கோரி வருகின்றது.
இதற்கமைய தமிழரசுக்கட்சி தொடர்பான எதிர்கால நடவடிக்கையை திட்டமிட்டு கையாழ்வதற்காக யாழ்ப்பானத்திற்கு சாணக்கியன் உட்பட சுமந்திரன் எம்பி ஆகியோர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதற்கமைய அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் பகிர்ந்தளிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த தேசிய பட்டியல் வெற்றிடத்திற்கு முன்னாள் எம்.பி க.கோடீஸ்வரனை நியமிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எம்.பி பதவியை இழக்கவுள்ள தவராசா கலையரசனை எதிர்வரும் மாகாண சபையில் போட்டியிட வைத்து முக்கிய பதவி ஒன்றினை வழங்க தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.