SuperTopAds

கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்தவர்களுக்கு இராணுவம் நிவாரண உதவி

ஆசிரியர் - Editor III
கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்தவர்களுக்கு இராணுவம் நிவாரண உதவி

கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளால் கிழக்கு மாகாணம் எங்கும் மேற்கொண்டு கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் படி அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை  பகுதியில் உள்ள வறிய மக்களுக்கு உலருணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் கல்முனைப் பிராந்திய இராணுவ  மேஜர் சாந்த விஜேயகோனின்   ஏற்பாட்டில்    வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதன் போது இன்று(10)  இடம்பெற்ற இந்நிவாரண செயற்பாட்டில்  இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட  அதிகாரிகள் குழுவினர்  அப்பகுதியில் சுகயீனமுற்றுள்ள குடும்ப தலைவர்கள் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களை இனங்கண்டு பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கி வைத்தனர்.

 குறித்த உலருணவு பொருட்களில் அரிசி சீனி தேயிலை பால் மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் பல  குடும்பங்களுக்கு இப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.