இளைஞர்கள் வழிகெட்டுப் போவதற்கு இலத்திரனியல் உபகரணங்களும் காரணமாகும்-

ஆசிரியர் - Editor III
இளைஞர்கள் வழிகெட்டுப் போவதற்கு இலத்திரனியல் உபகரணங்களும் காரணமாகும்-

கோவிட் 19 தொற்று காலத்தில்    இளைஞர்  யுவதிகள் வீட்டில் முடக்கி விடப்பட்டதனால் அவர்களின் செயற்றிறன்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  


நல்லிணக்கத்திற்கான எண்ணக்கரு  சமூகத்தின் இளைஞர்களினால் கட்டியெழுப்பப்படல் வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர்   அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

மனித அபிவிருத்தி தாபனத்தினால்  அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துகின்ற திட்டத்தின் ஒரு செயற்பாடாக சகவாழ்வுச் சங்கங்களிலுள்ள இளைஞர்களுக்கு மொழி உரிமைகள் அடிப்படை உரிமைகள் மற்றும் சமகாலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் மொழி ரீதியான பிரச்சினைகள் தொடர்பான அறிவினை ஏற்படுத்தும் பயிற்சியினை இன்று கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் மனித அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியாழ் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  மேலும்  கருத்துத் தெரிவிக்கும் போது

கோவிட் 19 தொற்று காலத்தின் போது இளைஞர்  யுவதிகள் வீட்டில் முடக்கி விடப்பட்டதனால் அவர்களின் செயற்றிறன்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சமுகங்களைப் பிரிக்கின்ற நிகழ்ச்சி நிரலில் ஒருசாரார்  மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் நல்லிணக்கத்திற்கான எண்ணக்கரு  சமுகத்தின் இளைஞர்களிடையே கட்டியெழுப்பப்படல் வேண்டும் .

  இளைஞர்கள் வழிகெட்டுப் போவதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் இலத்திரனியல் உபகரணங்கள் மூலம் கிடைக்கிறது. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பொலிசார் குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டிற்கு உள்ளாகின்றனர். இதனால் நாட்டின் சட்டம் மேலோங்குகிறது. சட்டத்திற்கு கட்டுப்பட்டு எம்மை நாம் பாதுகாக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு அனைவர்களும் தள்ளப்பட்டுள்ளதால் பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.

மேலும் கடந்த பல தசாப்தங்களாக இலங்கைப் பெண்கள் பல்வேறு வகையான சவால்களை சந்தித்துள்ளனர். சமத்துவம் உரிமைகளுக்கான கௌரவம்  போன்றவற்றுக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியுள்ளனர். இலங்கையில் சமூக நீதியினையும் நிலைத்து நிற்கக் கூடிய சமாதானத்தினையும் கொண்டு வருவதற்கு பெரிதும் பெண்கள் பங்களிப்புச் செய்துள்ளனர்  இன்று பெண்கள் கொள்கை சட்டம் ஆகியவற்றுக்கான சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் உருவாக்குவதற்காக முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர் என மேற்கண்டவாறு   தெரிவித்தார்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு