SuperTopAds

தமிழ் கபினட் அமைச்சும் இராஜாங்க அமைச்சும் இருந்தும் அம்பாறை மாவட்டம் முற்றாக புறக்கணிப்பு......! தேர்தல் காலத்தில் வாக்கினை சிதறடிக்க காட்டிய முனைப்பு அம்பாறை தமிழர்களின் நலனில் இல்லை

ஆசிரியர் - Editor III
தமிழ் கபினட் அமைச்சும் இராஜாங்க அமைச்சும் இருந்தும் அம்பாறை மாவட்டம் முற்றாக புறக்கணிப்பு......! தேர்தல் காலத்தில் வாக்கினை சிதறடிக்க காட்டிய முனைப்பு அம்பாறை தமிழர்களின் நலனில் இல்லை

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளார் அ.நிதான்சன் குற்றச்சாட்டு

 அமைச்சரவையில் அந்தஸ்து உள்ள அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் இருந்தும் அம்பாறைக்கு பயன்படவில்லை.

குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கொள்கையுடன் நிற்கும் கட்சிகள் கூட்டாக தரமுயர்த்தலை வலியுறுத்திக் கொண்டு இருக்கும் காலகட்டத்தில் இன்றுவரை இராஜாங்க அமைச்சர் திரு.வியாழேந்திரன் கல்முனை பிரதேச செயலகத்தை 3நாட்களில் தரமுயர்த்தி தருவதாக சொன்னார்.ஆனால் இன்றுவரை  அதனை வந்து பார்க்கவுமில்லை எந்தமுன்னேற்றமும் காணவில்லை.

அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சரவை இருந்தும் இதுவரை அம்பாறை வாழ் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அபிவிருத்திசார் நிதிகளையும் வழங்கவில்லை.

இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் இதுவரையில் ஒரு ரூபாய் கூட அம்பாறை தமிழ் மக்கள் நலனுக்காக நிதி ஒதுக்கவில்லை.முழு நாட்டுக்குமான அமைச்சர்களாக செயல்படாமல்  தங்களது மாவட்டத்துக்கு மாத்திரம் அமைச்சர்களாக செயல்படுகின்றனர்.

அம்பாறையில் சிறுபான்மையாக இருக்கும் தமிழ் மக்களின் வாக்கினை சுரண்ட சிதறடிக்க காட்டிய முனைப்பு அம்பாறை மாவட்ட தமிழ் நலனிலும் அபிவிருத்தியிலும் இல்லை.கடந்த பாராளுமன்ற தேர்தலில்  பொதுஜன பெரமுன சார்பிலும் போட்டியிட்டு தமிழ் மக்கள் வாக்கினை எடுத்தார்கள் கப்பல் சின்னத்தில் போட்டியிட்டும் வாக்கெடுத்தார்கள்,ஈபிடிபி சார்பிலும் போட்டியிட்டு வாக் கெடுத்தார்கள் இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து வாக்குகளை பிரிப்பதில் காட்டிய முனைப்பினை குறைந்த பட்சம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நலலில் காட்டவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் நிதி ஒதுக்கீடு மட்டும்தானே மீதம் உள்ளது. எனும் வினா எழுகின்றது.