யாழ்.மருதனார்மடத்தில் உணவு விநியோகஸ்த்தரை வழிமறித்து மிரட்டி இரண்டு உணவு பொதிகளை பிடுங்கி தின்ற பொலிஸார்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மருதனார்மடத்தில் உணவு விநியோகஸ்த்தரை வழிமறித்து மிரட்டி இரண்டு உணவு பொதிகளை பிடுங்கி தின்ற பொலிஸார்!

உணவு விநியோகம் செய்யும் ஊழியரை அச்சுறுத்தி இரண்டு உணவு பொதிகளை பிடுங்கி தின்றதாக சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலேயே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது, சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, சாவகச்சோி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஓடர் செய்யப்பட்ட உணவு பொதிகளை விநியோகஸ்த்தர்

எடுத்துச் சென்றபோது மருதனார் மடம் சந்திக்கு அருகில் குறித்த விநியோகஸ்த்தரை வழிமறித்த சீருடையுடன் இருந்த பொலிஸார் இரண்டு உணவு பொதிகளை அச்சுறுத்தி பிடுங்கி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக விநியோகஸ்த்தர்

தனது நிறுவனத்தின் உரிமையாளருக்கு தொியப்படுத்திய நிலையில் அவர் சுன்னாகம் பொலிஸாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

Radio