விசேட அதிரடிப்படையினர் வீதியில் அநாவசியமாக நடமாடிய சிறுவனை அழைத்து விசாரிக்கும் காட்சி
நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
எனினும் சிலர் சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரேனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் பயணக்கட்டுப்பாட்டை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் விசேட அதிரடிப்படையினரின் ரோந்து நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது.
கல்முனை கடற்கரைப்பள்ளி பகுதியில் இன்று (9) பயணத்தடை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டாலும் பயணத்தடைகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை விசேட அதிரடிப்படையினர் வீதியில் அநாவசியமாக நடமாடிய சிறுவனை அழைத்து விசாரிக்கும் காட்சியே இது.