எங்கு போனது ஒரே நாடு, ஒரே சட்டம்?

ஆசிரியர் - Admin
எங்கு போனது ஒரே நாடு, ஒரே சட்டம்?

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்க முயற்சிக்கும் பௌத்த பிக்குகள், நாட்டின் நிலங்களைச் சீனர்களுக்கு வழங்குவதை வேடிக்கைப் பார்ப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், எமது நாட்டு அரசாங்கம், சீனாவுக்கு முன்பாக அடிப்பணிவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சகோதர இனமான தமிழ் மக்களுக்கு 13ஆவது திருத்தத்தின்படி கிடைக்க வேண்டிய அதிகாரங்களைக் கூட வழங்காதவர்கள், இந்நாட்டின் கடலையும் நிலத்தையும், தூரத்தில் உள்ள சீனர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள் என்றார்.

இச்சட்டமூலத்தை இன்று வாக்கெடுப்புக்கு அவசரமாக எடுத்துக்கொள்ளாது, அதனை ஆராய்வதற்கு காலம் வழங்கப்பட வேண்டுமெனவும் இச்சட்டமூலத்தில் சர்ச்சைக்குரிய சரத்துக்கள், இலங்கையில் சீனாவின் கொலனி ஒன்று அமைக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறதெனவும் தெரிவித்தார்.

“ஒரே நாடு, ஒரே சட்டம் என்கிற அரசாங்கத்தின் கொள்கை, இன்று எங்குப் போனது, நாடு முழுவதும் சீனச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா?” எனவும், விக்னேஸ்வரன் எம்.பி வினவினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு