யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் 32 வருடங்களாக இடமாற்றமில்லாமல் குந்தியிருக்கும் அரச ஊழியர்..! பாதுகாப்பது யார் அரசியலா? அதிகாரமா?

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் 32 வருடங்களாக இடமாற்றமில்லாமல் குந்தியிருக்கும் அரச ஊழியர்..! பாதுகாப்பது யார் அரசியலா? அதிகாரமா?

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் எந்த இடமாற்றமும் இல்லாமல் 32 வருடங்களாக உத்தியோகஸ்த்தர் ஒருவர் பணியாற்றுகின்றமை தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக கண்டறியப்பட்டிருக்கின்றது. 

மேலும் இதே பிரதேச செயலர் பிரிவில் பல உத்தியோகஸ்த்தர்கள் 10 வருடங்களை கடந்தும் இடமாற்றம் எதுவுமில்லாமல். இருப்பதும் தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இடமாற்றுச் சுற்று நிருபத்தின் பிரகாரம் 6 வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் தமது இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்க முடியும் என அறியக் கிடைத்தது. இவ்வாறான நிலையில் 

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தில் அப் பிரதேச செயலகத்தில் இட மாற்றம் செய்யப்படாமல் 10 வருடங்களைத் தாண்டி பலர் இருப்பது அம்பலமாகியுள்ளது. 

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணியிட மாற்றத்துக்கு குறித்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்காமல் இருப்பினும் மாவட்ட செயலகத்தால் வழங்கப்படும் உள்ளக இடமாற்றம் ஏன்? இவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

அரச சேவை பலர் தமது சொந்த மாவட்டங்களை விட்டு வெளியில் கடமையாற்றுகின்ற நிலையில் அதே மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அவர்களும் தாம் தமது சொந்த பிரதேசத்திற்கு திரும்ப வேண்டும் என்றால் 

அங்கு உள்ளவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.இவ்வாறான நிலையில் குறித்த உத்தியோகத்தர்கள் பல வருடகலமாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் இருப்பது போன்று ஏனைய பிரதேச செயலகங்களிலும் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதா? 

என்ற கேள்வியும் எழுகின்றது. ஆகவே பொறுப்புவாய்ந்த உயர் அதிகாரிகள் உரிய காலத்தில் அரச சேவையில் வழங்கப்படுகின்ற இடமாற்றங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது ஏனைய உத்தியோகத்தர்களும் பாதிக்கப்படார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு