வவுனியா, மன்னாரில் நாளை மின்தடை
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமையும்(27) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை(27) காலை- 08.30 மணி முதல் பிற்பகல்- 05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பொற்கோவில் கிராமம் பகுதியிலும்,
காலை-09 மணி முதல் மாலை- 04.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் பறயனாலங்குளம், மடுச்சந்தி, மல்லவராயர் கட்டையடம்பன், தம்பனைக்குளம், பண்ணைவெட்டுவான், பண்ணை வெட்டுவான் தொழில்நுட்பக்கல்லூரி, இசைமலைத் தாழ்வு, கற்கடந்தகுளம், நீராவிபுரம், செட்டியார் கட்டையடம்பன், முருங்கன் விதைகள் உற்பத்திநிலையம், மாதர் கிராமம், பெரியகுஞ்சுக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.