எழுமாற்று பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை நாடு முழுவதும் ஆரம்பம்..! புத்தாண்டுக்கு பின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 8 வீதத்தால் அதிகரிப்பா?

ஆசிரியர் - Editor I
எழுமாற்று பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை நாடு முழுவதும் ஆரம்பம்..! புத்தாண்டுக்கு பின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 8 வீதத்தால் அதிகரிப்பா?

வடகிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் எழுமாற்று பரிசோதனைகளை நடாத்தி கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையினை அரசாங்கம் நேற்றய தினம் தொடக்கம் ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கொழும்பில் நேற்றய தினம் நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கொழும்பு மாநகரசபை தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்திய நிபுணர் தினுகா குருகே கூறியிருக்கின்றார். 

மேலும் சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 8 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி ருவாண் விஜேமுனி கூறியுள்ளார். மேலும் தற்போதுள்ள தொற்று அபாயத்தை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் எனவும், 

தவறினால் நாட்டில் 3ம் அலை உருவாகும். எனவும் கூறியிருக்கும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, வடகிழக்கு, வடமேல், மேல் மாகாணங்களில் சில பகுதிகளில் புதிய உப கொத்தணிகள் உருவாகும வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் புத்தாண்டு காலத்தில் மக்கள் பொறுப்பற்று நடந்துகொண்டதன் விளைவை  ஏப்ரல் மாத இறுதியிலும் மே மாத தொடக்கத்திலும் அறியலாம். என சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹண கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு