யாழ்.சுன்னாகம் நிலத்தடி நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா..? பொதுமக்கள் கேள்விக்கு அறுதியான பதில் வழக்க மறுக்கும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை..

ஆசிரியர் - Editor I

யாழ்.சுன்னாகம் நிலத்தடி நீரை மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என கூறுவதில் சிக்கல் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தொிவித்துள்ளது. 

உடுவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினை தொிவித்திருக்கின்றார். 

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மேற்படி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது சுன்னாகம் நிலத்தடி நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா?

என சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கேள்வியாக எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும்போதே குடிக்கலாம் என சொல்வதில் சிக்கல் உள்ளதாக கூறியுள்ளனர். 

மேலும் அவர் கூறுகையில், நிலத்தடி நீரில் கழிவு எண்ணையின் தாக்கும் உள்ளதா? இல்லையா? என்பதை ஆய்வுகள் மூலம் நிரூபனம் செய்வதற்கான வளம் தம்மிடம் இல்லை எனவும், 

வேறு யாராவது முன்வந்தால் ஆழ்துளை கிணறுகளின் மூலம் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். என கூறியுள்ளதுடன், தற்போது குடிக்கலாமா? குடிக்க கூடாதா? 

என கேட்டால் அதற்கு தம்மால் பதில் வழங்க முடியாது. என அவர் மேலும் கூறியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு