சற்றுமுன்னர் முல்லை செம்மலையில் நோயாளர் காவு வண்டி மோதி ஒருவர் பலி!

ஆசிரியர் - Admin
சற்றுமுன்னர் முல்லை செம்மலையில் நோயாளர் காவு வண்டி மோதி ஒருவர் பலி!

சற்றுமுன்னர் முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் செம்மலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

செம்மலை வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி ஒன்றில் எதிரே உந்துருளி ஒன்றில் வந்த நபர் ஒருவர் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்து இன்று இரவு 7.30மணியில் இடம்பெற்றுள்ளது.

நோயாளர்கள் எவரும் இல்லாத நிலையில் வைத்தியசாலை பணியாளர்களை ஏற்றிசென்ற குறித்த நோயாளர் காவு வண்டியே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து இடம்பெற்ற நிலையில் நோயாளர் காவு வண்டியின் சாரதி தப்பி ஓடிய நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய நோயாளர் காவு வண்டியை மக்கள் அடித்து நொருக்கியுள்ள நிலையில் பொலிசார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.